முன்விரோதத்தில் இந்து முன்னணி பிரமுகர் கொலை- வியாபாரி கைது

கீழக்கரையில் முன்விரோதத்தில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கீழக்கரை:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவை சேர்ந்தவர் சிவதவசிமுனி(வயது 52). இவர் சங்கு வியாபாரம் செய்து வந்தார். இந்து முன்னணி முன்னாள் நகர தலைவரான இவருக்கும், பழைய இரும்பு வியாபாரம் செய்துவரும் சேகர்(45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சேகர், சிவதவசிமுனியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த சிவதவசிமுனியை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் முலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com