அரவக்குறிச்சி பகுதியில் அதிகளவு பனி மூட்டம்- வாகன ஓட்டிகள் அவதி

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.
அரவக்குறிச்சி பகுதியில் பனி மூட்டம்
அரவக்குறிச்சி பகுதியில் பனி மூட்டம்
Published on

அரவக்குறிச்சி:

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கடுமையான குளிர் நிலவியது. அதன் எதிரொலியாக நேற்று காலை விடிந்தது முதல் 9 மணி வரை அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது.

இதிலும், குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர். பல வாகன ஓட்டிகள் தங்கது வாகனங்களை ரோட்டின் ஓரமாக சிறிது நேரம் நிறுத்தி பிறகு சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com