உடல்நலக்குறைவால் அவதி: தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

கோவை அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கோவை:

கோவையை அடுத்த பேரூர் செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மயில்சாமி. இவருடைய மனைவி மரகதம் (வயது 73). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. 

இதனால் மன வேதனையடைந்த அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com