சிவகாசியில் 7 இடங்களில் மினி கிளினிக்- சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் 7 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேண்டுராயபுரத்தில் அமைக்கப்பட உள்ள மினி கிளினிக்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
வேண்டுராயபுரத்தில் அமைக்கப்பட உள்ள மினி கிளினிக்கை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

சிவகாசி:

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் இடங்களில் முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 19 இடங்களில் மினி கிளினிக் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதில் 13 மினி கிளினிக்குகள் சிவகாசி சுகாதார மாவட்டத்தில் அமைகிறது.

சிவகாசியில் கங்காகுளம், பள்ளபட்டி, சித்துராஜபுரம், பெரியபொட்டல்பட்டி, சுக்கிரவார்பட்டி, மம்சாபுரம், வேண்டுராயபுரம் ஆகிய இடங்களில் முதல்- அமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

வேண்டுராயபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், வட்டார மருத்துவர் வைரகுமார், ஜெயச்சந்திரன், முன்னாள் யூனியன் சேர்மன் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காளிமுத்து ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com