கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு ஐகோர்ட் இடைக்கால தடை

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிரிஜா வைத்தியநாதன்
கிரிஜா வைத்தியநாதன்
Published on

சென்னை:

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.  

கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் இல்லாததால், அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது மனுவில் கூறி உள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com