அரியானாவில் மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிப்பு

அரியானாவில் அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சண்டிகார்:

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த 29-ந் தேதி, டெல்லி சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் நடந்தது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் பதற்றம் நிலவுவதால், டெல்லியை ஒட்டியுள்ள அரியானா மாநிலத்தில் 3 மாவட்டங்களில் இணைய சேவை ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்தநிலையில், அம்பாலா, ரோதக், பானிபட் உள்பட மேலும் 14 மாவட்டங்களில் இணைய சேவையை அரியானா மாநில பா.ஜனதா அரசு நேற்று துண்டித்தது. இந்த மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை இணைய சேவையோ, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்பும் சேவையோ இருக்காது என்று மாநில அரசு கூறியுள்ளது.

அமைதி சீர்குலைவதை தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com