அரூர் அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி

அரூர் அருகே மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி பலி
Published on

அரூர்:

அரூர் அருகே உள்ள பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 33). இவர் கைலாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கோட்டப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com