அரூர் பகுதியில் விதிமுறையை மீறிய 17 வாகனங்களுக்கு அபராதம்

அரூர் பகுதியில் விதிமுறையை மீறிய 17 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அபராதம்
Published on

அரூர்:

அரூர் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அதிக அளவில் பாரம் ஏற்றி சென்ற வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி பம்பர் பொறுத்தப்பட்ட 17 வாகனங்களுக்கு ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தனர். அப்போது விதிமுறையை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com