கைது
கைது

அரூர் அருகே சாராயம், மது விற்ற 10 பேர் கைது

அரூர் அருகே சாராயம், மது விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

அரூர்:

அரூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வேலனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சாராயம் விற்ற திருப்பதி (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ராமியம்பட்டி மணி (37), இருமத்தூர் சீனிவாசன் (38) மற்றும் சசிகலா (38), நத்தமேடு லட்சுமணன் (35), பொம்மிடி நாகப்பன் (63), திப்பிரெட்டிஅள்ளி ஜானகி(45), காரிமங்கலம் முனியப்பன் (55), ரங்கநாதன் (37), தீர்த்தமலை கோபு (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சாராயம், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com