கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரவணன் (வயது 30) விவசாயி. இவருக்கும் மங்காவரத்தை சேர்ந்த நாகலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். கணவர் ரவணனுக்கும், அவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாகலட்சுமி கடந்த சில வாரங்களாக கணவரை பிரிந்து மங்காவரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது குளியல் அறையில் சேலையில் நாகலட்சுமி தூக்குப்போட்டு கொண்டார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com