கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணியின் காரணமாக புறநகர் மின்சார ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மின்சார ரெயில் (கோப்பு படம்)
மின்சார ரெயில் (கோப்பு படம்)
Published on

சென்னை:

சென்ட்ரல்-கூடூர் மார்க்கத்தில், எழும்பூர்-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் ரெயில் சேவையில் சில மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12.40 மணிக்கு சூளூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்பட்டது.

சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு சூளூர்பேட்டை வரை செல்லும் ரெயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்பட்டன. சூளூர்பேட்டையில் இருந்து மதியம் 3.10 மணிக்கு சென்ட்ரல் வரை செல்லும் ரெயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படுகிறது.

சூளூர்பேட்டையில் இருந்து மாலை 5.15 மணிக்கு வேளச்சேரி வரை செல்லும் ரெயில் சூளூர்பேட்டைக்கு பதிலாக கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com