கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் மளிகை கடை நடத்தி வருபவர் மன்னாரை சேர்ந்த சேகர் (வயது 48). இவர் முகாமில் தனது வீட்டுக்கு முன்பாக மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் கடையின் பிளைவுட் கதவின் பூட்டை கடப்பாரை கொண்டு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள சிகரெட் போன்றவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com