

அகமதாபாத்:
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, நேற்று வதோதராவில் உள்ள நிஜம்புரா பகுதியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மயங்கி விழுந்தார். அருகிலுள்ள காவலர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து மேடையிலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விஜய் ரூபானி தற்போது நலமுடன் உள்ளார்; மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் ரூபானிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், பாசிட்டிவ் என வந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.