திருமண நாளில் மாப்பிள்ளை தற்கொலை செய்தது ஏன்?- போலீசார் விசாரணை

இசக்கி ராஜா தனது வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.
இசக்கிராஜ்
இசக்கிராஜ்
Published on

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள தாழையூத்து வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜ் (வயது 35). கூலி தொழிலாளி.

இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

நேற்று காலையில் பெண் வீட்டில் திருமணம் நடத்த ஏற்பாடு நடந்து வந்தது. இந் நிலையில் அதிகாலை இசக்கி ராஜா தனது வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

இதற்கிடையே தாழையூத்து- கீழகுத்தபாஞ்சான் சாலையில் உள்ள கிணற்றின் அருகே இசக்கி ராஜின் செல்போன் மற்றும் செருப்புகள் கிடந்தன. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று கிணற்றில் இறங்கி அவரை தேடினர்.

அப்போது இசக்கிராஜை சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டது. விசாரணையில் இசக்கிராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அங்கயற்கண்ணி வழக்குப் பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com