ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு

ஈஷா யோகா மையம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகா சிவராத்திரி விழா
மகா சிவராத்திரி விழா
Published on

சென்னை:

கோவை ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈஷா யோகா மையம் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவை கடந்த 25 ஆண்டுகளாக வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இந்த விழாவில் சாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.

இந்தநிலையில் ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி விழாவை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மகா சிவராத்திரி விழாவுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. வழக்கம்போல் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மகா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த தீர்ப்பை ஈஷா மையம் வரவேற்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com