பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேலைக்கு செல்வதை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கணபதி:

கோவை கணபதி சின்னச்சாமி நகரை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவருடைய மகள் தீபா (வயது 21). பி.காம் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்து இருந்தார். ஆனால் தீபாவை வேலைக்கு அனுப்ப பெற்றோருக்கு சம்மதம் இல்லை. அத்துடன் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் தீபா நான் இப்போது வேலைக்கு செல்கிறேன் என்று கூறி உள்ளார். அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com