சென்னையில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 2-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்.
Published on

சென்னை:

அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், 4.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்புதல், காலமுறை ஊதியத்தில் பணி நியமனம், 8-வது ஊதிய குழுவில் நிறைவேற்றப்பட்ட 21 மாதம் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

சென்னையில் எழிலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட 42 அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மறியல் நடந்தது. வட சென்னை மாவட்ட பொருளாளர் ஏழுமலை, தென் சென்னை மாவட்ட செயலாளர் வினோத் குமார் ஆகியோர் தலைமையில் எழிலகம் ஆவின் பார்லர் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் அன்பரசு கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்- அமைச்சர் எங்களை அழைத்து பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com