கரூர்: அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
போராட்டம்
Published on

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கிட வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும். சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கிட அறிவித்த அரசாணையை அமல்படுத்திட வேண்டும்.

அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இழந்ததை மீட்டிட இருப்பதை காத்திட தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com