கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 வாலிபர்கள் கைது

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலையில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது கருங்காலிகுப்பம் சுடுகாடு அருகே பஸ் வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் கருங்காலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த சுகன்ராஜ் (வயது27), பிரகாஷ் (26) ஆகியோர் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வாகனங்கள் முந்தும்போது உரசிகொண்டுள்ளன. இதனால் கோபமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பஸ்சின் பின்புற கண்ணாடி மீது கல் வீசினர். டிரைவர், கண்டக்டரையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். வாலிபர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com