பரமத்தி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை

பரமத்தி அருகே அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி அருகே உள்ள தேவிபாளையத்தை சேர்ந்தவர் பாபா. இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 31). இவர் பரமத்தி அருகே பஞ்சப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா என்பவரை‌ காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளாள்.

இந்தநிலையில் கணவர், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த சித்ரா, தனது கணவர் வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை ‌‌‌‌‌‌பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com