திருவாரூரில் போலீசாரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவாரூர்:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 19-ந் தேதி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது அரசு ஊழியர்களை தாக்கிய போலீசாரை கண்டித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். 

மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ், கூட்டுறவு ஊழியர் சங்க மாநில செயலாளர் சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com