கும்பகோணத்தில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

கும்பகோணத்தில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது
கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மாதுளம்பேட்டை அழகப்பன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). இவர் தற்போது திருவிடைமருதூரை அடுத்த புளியம்பேட்டை விஜயலட்சுமி நகரில் வசித்து வருகிறார். கஞ்சா வியாபாரியான இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, குண்டர் சட்டத்தில் செல்வத்தை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com