முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த்
செய்திகள்
கோவாவில் புதிய கல்விக் கொள்கை அமல்: முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த்
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு உயர்நிலைக் குழுக்களை கோவா அரசு கடந்தாண்டு நியமித்தது.
புதுடெல்லி:
மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கை - 2020 வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கோவாவில் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும் என முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்-மந்திரி பிரமோந்த் சாவந்த் கூறியதாவது:-
அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு அடுத்தாண்டு முதல் தொடக்க நிலைக் கல்வி வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் என்றார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு உயர்நிலைக் குழுக்களை கோவா அரசு கடந்தாண்டு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரை தற்போது அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

