நெல்லை மாவட்டத்தில் 50 மொபைல் வாகனங்களில் சென்று கிராம பகுதிகளில் தடுப்பூசி - கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் 50 மொபைல் வாகனங்களில் சென்று கிராம பகுதிகளில் தடுப்பூசி கலெக்டர் பேட்டி
கலெக்டர் விஷ்ணு சாப்டர் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
கலெக்டர் விஷ்ணு சாப்டர் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை யொட்டி டவுனில் ஒரு பள்ளியில் கலெக்டர் விஷ்ணு நேரில் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டதை முன்னிட்டு அரசு விதித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு உள்ளார்கள். தற்போது தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 13 ஆயிரத்து 893 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதி மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த 50 மொபைல் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஒவ்வொரு கிராம பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடப்படும்.

வருகிற 31-ந் தேதிக்குள் நெல்லை மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். நெல்லை மாவட்டத்தில் 11 லட்சத்து 50 ஆயிரம் பேர் தடுப்பூசி போட தகுதியானவர்கள் உள்ளார்கள். இதில் தற்போது 5 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மூலம் பெற்றோர்களுக்கும் தடுப்பூசி போட வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிக் கூடங்களில் வகுப்பறையில் போதிய இடவசதி இருந்தால் கூடுதல் மாணவர் அமர வைத்து படிக்க வைக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com