கொடைக்கானலில் தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

கொடைக்கானலில் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
தற்கொலை
தற்கொலை
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் அம்பேத்கர் நகர், கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மேக்சி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா இறந்துவிட்ட நிலையில், மேக்சி தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவரது மூத்த மகள் சந்தியா (வயது 15). இவர் கொடைக்கானலில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சந்தியா கடந்த சில தினங்களாக செல்போனில் அடிக்கடி பேசியபடி இருந்துள்ளார். இதனை மேக்சி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சந்தியா, நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மேக்சி கொடுமைப்படுத்தியதால் தான் சந்தியா தற்கொலை செய்துகொண்டார் என்றும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்த காயங்கள் உள்ளதால், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து ராஜாவின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com