மாணவியை பலாத்காரம் செய்து தலைமறைவான கட்டிட தொழிலாளி சிக்கினார்

மாணவியை பலாத்காரம் செய்து தலைமறைவான கட்டிட தொழிலாளியை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர்.
கைதான சதீஸ்
கைதான சதீஸ்
Published on

குளச்சல்:

புதுக்கடை அருகே எஸ்.டி.மங்காடு வாவறையை சேர்ந்த தேவதாஸ் மகன் சதீஸ் (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருக்கு பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அன்று அந்த மாணவியை சந்தித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி, சதீஸ் சொல்வதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் சதீஸ் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பிறகும் இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவியை சந்திப்பதை அவர் தவிர்த்து வந்துள்ளார். மேலும், உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என சதீஸ் கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் மாணவி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சதீஸ், அவரை ஒரு வாரத்தில் பதிவு திருமணம் செய்வதாக உறுதியளித்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மாணவியின் சகோதரர்கள் திருமண பேச்சுவார்த்தை நடத்த சதீஸின் வீட்டிற்கு சென்றனர். அப்போது சதீஸின் குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சதீஸ், அவரது தாயார் சுந்தரி (70), சகோதரர் ரதீஸ் (38) ஆகியோர் மீது குளச்சல் மகளிர் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்தார்.

இதனை அறிந்த சதீஷ் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் 2 மாதங்களுக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்து குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சதீஸ் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com