சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை- குண்டர் சட்டத்தில் முதியவர் கைது

ராமநாதபுரத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கைது
கைது
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (வயது 66). என்பவர் சம்பவத்தன்று அவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காதர் மைதீன் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்ட பிரிவுகளின் கீழ் கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், அவர் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரையின் பேரில் ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் காதர் மைதீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலகராணி காதர் மைதீனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com