எருமப்பட்டி அருகே காப்பகத்தில் இருந்து சிறுமி மாயம்

எருமப்பட்டி அருகே காப்பகத்தில் இருந்து வெளியேறிய சிறுமி குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமி மாயம்
சிறுமி மாயம்
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜன்புரத்தில் ஒரு காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த குமாரபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் காப்பகத்தின் சுவர் மேல் ஏறிக்குதித்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமி சொந்த ஊரில் இருக்கும்போது அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது அதே கடையில் வேலை பார்த்த பள்ளிபாளையம் அலமேடு ஆலாம்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் செந்தில்குமார் (வயது 32) என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததும், இதுபற்றி வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. 

இந்த நிலையில்தான் அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தபோதுதான் மாயமாகி உள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com