வானூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அருவாப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 25). இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து திண்டிவனம் சைல்டு லைன் அமைப்பிற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தகவல் அறிந்த சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, சமூக நல விரிவாக்க அலுவலர் அம்சவேணி, ரோசணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுமிக்கு 17 வயது என்பது தெரியவந்தது.

உடனே அவரது பெற்றோருக்கு அறிவுரை வழங்கி திருமணத்தை நிறுத்தினர். அதோடு சிறுமியை விழுப்புரம் சமூகநலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com