மூங்கில்துறைப்பட்டில் சிறுமி கடத்தல்- பெற்றோர் புகார்

மூங்கில்துறைப்பட்டில் 16 வயது சிறுமி கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.
கடத்தல்
கடத்தல்
Published on

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு பகுதியை சேர்ந்தவள் 16 வயது சிறுமி. சம்பவத்தன்று இவள் வீ்ட்டில் இருந்தபோது, அவளை அதே பகுதியை சேர்ந்த உத்திரன் மகன் தமிழ்செல்வன்(வயது 25) என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது. 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு தமிழ்செல்வனையும், கடத்தப்பட்ட சிறுமியையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com