ஆட்டையாம்பட்டி அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது

ஆட்டையாம்பட்டி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆட்டையாம்பட்டி:

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரிய சீரகாபாடி அம்மன் நகரை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 23). தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்திச்சென்ற சின்ராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com