சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது

கொடைக்கானல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது
கைது
Published on

பழனி:

கொடைக்கானல் அருகே உள்ள புதுப்புத்தூரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் மாயவன் (வயது 24). வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்காக பழனி பகுதிக்கு வந்தபோது, 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயவன், ஆசை வார்த்தைகள் கூறி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அவர்கள் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாயவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com