சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறை
சிறை
Published on

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் லெட்சுமணன் (வயது28). இவர் கடந்த ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லெட்சுமணனை கைது செய்தனர்.

திருவாரூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லெட்சுமணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருவாரூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com