சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறை
சிறை
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜாபர் அலி (வயது 42). இவர் கடந்த 1-6-2018 அன்று அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். 

இதுபற்றி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் ஜாபர் அலியை கைது செய்து திருச்சி மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஜாபர் அலிக்கு ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி கே.வனிதா தீர்ப்பு கூறினார். 

இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.அருள்செல்வி ஆஜராகி வாதாடினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com