போடி அருகே பிரசவத்தின் போது சிறுமி திடீர் மரணம்

போடி அருகே வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போது பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணம்
மரணம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே நாகலாபுரம் பகுதியில் 17 வயது சிறுமி தனது தாத்தா, பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் சிறுமியிடம் பேசி பழகி வந்தது தெரியவந்தது. மேலும் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளதும் தெரியவந்தது.

இந்த நிலையில் வலி அதிகமானதால் சிறுமி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறுமி உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்தார்.

போடி தாலுகா போலீசார் இது குறித்து 2 வாலிபர்கள் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com