கமுதி அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலி

கமுதி அருகே ஊருணியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தீபா
தீபா
Published on

கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி அருகே உள்ள டி.எம்.கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 37). இவரது மகள் தீபா (7). இந்த சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலருடன் சேர்ந்து டி.எம்.கோட்டை சின்ன ஊருணிக்கு குளிக்க சென்றாள். அங்கு கரையில் நின்றுகொண்டு இருந்த சிறுமி திடீரென தண்ணீருக்குள் இறங்கினாள். பின்னர் அவள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.

பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிறுமியின் உடலைப் பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெருநாழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com