வானூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

வானூர் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலி
பலி
Published on

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ராஜ்குமார் (வயது 42). வில்லியனூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

நேற்று மாலை இவரது மகள் யாழினி மற்றும் 4 சிறுமிகள் கிளியனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவில் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது யாழினி குளத்தின் படிக்கட்டில் இறங்கி சென்ற போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்துவிட்டாள். இதில் நீரில் மூழ்கி தத்தளித்தாள்.

உடன் வந்த சிறுமிகள் கூச்சல் சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குளத்தில் இறங்கி யாழினியை மீட்டு தைலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com