செஞ்சி அருகே குடோன் அருகே நின்ற லாரி திருட்டு

செஞ்சி அருகே குடோன் அருகே நின்ற லாரி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருட்டு
திருட்டு
Published on

செஞ்சி:

விழுப்புரம் பூங்குன்றம் என்ற ஊரை சேர்ந்தவர் பாபு (வயது 37). இவர் தனக்கு சொந்தமான லாரியை விழுப்புரம் செஞ்சி சாலை குண்டலப் புலியூரில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனில் அரிசி மூட்டைகளை ஏற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டிருந்தார்.

இவர் தனது லாரியை பொருட்களை ஏற்றி இறக்கிவிட்டு குடோன் அருகே நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் சென்று பார்த்தபோது லாரியை காணவில்லை. இதுகுறித்து அவர் கெடார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com