வேப்பந்தட்டை அருகே பிளஸ்-2 மாணவியை காரில் கடத்திய கும்பல்

பட்டப்பகலில் பள்ளி மாணவியை ஆயுதங்களை காட்டி மிரட்டி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூரை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவரது மகள் மோகனப்பிரியா (வயது 17). பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது பெற்றோருடன் வயலில் விவசாய வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்க ஆயுதங்களுடன் திபு, திபுவென ஓடி வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மோகனப்பிரியாவை குண்டு கட்டாக தூக்கி காருக்குள் திணித்தனர். இதனை பார்த்த அவரது பெற்றோர் கூக்குரலிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால் அந்த கும்பல் அவர்களை கிட்டே வந்தால் வெட்டி விடுவோம் என கூறி கத்தியை காட்டி மிரட்டி மோகனப்பிரியாவை காரில் கடத்தி சென்றனர்.

இந்த துணிகர சம்பவம் குறித்து மோகனப்பிரியாவின் தந்தை தங்கராஜ் அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் மோகனப்பிரியா கடத்திச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com