கோவில் பூட்டை உடைத்து 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை

போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 7 பேர் கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது.
ஐம்பொன் சிலைகள்
ஐம்பொன் சிலைகள்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை. நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த 3 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 1 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 2½ அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை, 1½ அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு சென்று விட்டனர்.

போலீசார் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, 7 பேர் கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com