சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்திய 5 பேர் கைது

சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் வெளிநாட்டு பணத்தை கடத்திய 5 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து துபாய்க்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு இண்டிகோ ஏர்வேஸ் விமானம் ஒன்று புறப்பட்டது.

இந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகளும், சுங்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்தனர். அப்போது சிலர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

அவர்களிடம் தனி அறையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது உரிய ஆவணம் இன்றி 5 பேர் அமெரிக்க டாலர், துபாய் ரியால் ஆகியவற்றை வைத்து இருந்தனர். இந்த வெளிநாட்டு பணங்களின் மதிப்பு ரூ. 60 லட்சம்.

இதையடுத்து, வெளிநாட்டு பணம் கடத்திய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 5 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. எதற்காக வெளிநாட்டு பணத்தை கடத்தினார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com