14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயம்: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

ஓமலூர் அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் சடையன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பெரியசாமி (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில், 14 வயது சிறுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்திய வாலிபர் பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com