அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகள் பாலியல் பலாத்காரம்- தலைமை ஆசிரியர் தலைமறைவு

தெலுங்கானா மாநிலத்தில் அரசுப் பள்ளிக்குள் வைத்து ஐந்து சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஐதராபாத்: 

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர், 7 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பள்ளிக்குள் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனைச்சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தலைமை ஆசிரியர் தலைமறைவாகி விட்டார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ஐ.சி.டி.எஸ்) அதிகாரிகளுடன் போலீசார் பாதிக்கபட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

பாதிக்கபட்ட 2ம் வகுப்பு சிறுமி ஒருவர் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முன், 40 வயதான  தலைமை ஆசிரியர் சிறுமிகளுக்கு ஆபாச படத்தை பார்க்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து  வெளியே சொன்னால் அவர்களை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com