ராமேசுவரத்தில் ஆயுதங்களுடன் 5 பேர் கைது

ராமேசுவரத்தில் ஆயுதங்களுடன் 5 பேரை கைது செய்த போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
கைது
Published on

ராமநாதபுரம்:

ராமேசுவரம் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்துல்கலாம் குளம் அருகே உள்ள கருவேலமர காட்டுக்குள் ராமேசுவரம் எம்.ஆர்.டி. தெருவைச் சேர்ந்த முத்து முருகன் (வயது 24), சிவகங்கை மாவட்டம் கொங்கம்பட்டி தங்கபாண்டி (25), ராமேசுவரம் முகேஷ் (21), புது ரோடு கோபாலகிருஷ்ணன் (21), தங்கச்சிமடம் சதாம் உசேன் (27) ஆகியோர் அமர்ந்துபேசிக்கொண்டு இருந்தனர்.

போலீசார் அவர்களை நோக்கி சென்றபோது 5 பேரும் தப்பிக்க முயற்சித்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அந்த இடத்தில் அரிவாள், இரும்பு கம்பி, கயிறு, மற்றும் மிளகாய்பொடி பாக்கெட் ஆகியவைகளை போலீசார் கைப்பற்றினர்.

பிடிபட்டவர்களிடம் விசாரித்தபோது, நடந்து வருபவர்களிடம் வழிப்பறி செய்யவும், வீடுகளில் கொள்ளை அடிக்கவும் திட்டமிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com