வானிலை முன்னறிவிப்பு- மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்க தடை

மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
மீனவர்கள்
மீனவர்கள்
Published on

கீழக்கரை:

தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரி கடற்பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடற்பகுதிகளில் இன்று 15.10.2021 மற்றும் 16.10.2021 ஆகிய 2 நாட்களுக்கு 4555 கி.மீ. வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் (பொ) .காமாட்சி கணேசன் அறிவித்துள்ளார்.

இதனால், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை மீனவர்கள் பாதுகாப்புடன் கரையோரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com