மண்டபம் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம்

மண்டபம் தோணித்துறை கடல் பகுதியில் கடல் தொழிலாளர்கள் சங்கம், பாரம்பரிய மீனவர்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிராமத் தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராமநாதபுரம்:

பாரம்பரிய மீனவர்களை பாதிக்கும் கடல் மீன்வள மசோதாவை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மண்டபம் கடற்கரையில் மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தியும், காதில் பூ சுற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டபம் தோணித்துறை கடல் பகுதியில் கடல் தொழிலாளர்கள் சங்கம், பாரம்பரிய மீனவர்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கிராமத் தலைவர் பால்சாமி தலைமை தாங்கினார்.

மகளிரணி செயலாளர் மனோகரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சீனிவாசன், பொருளாளர் சுடலை காசி முன்னிலை வகித்தனர்.

கடல் தொழிலாளர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி பேசினார். கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com