கருங்கல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

கருங்கல்:

குளச்சல் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ஜெரால்டு (வயது 45), மீனவர். இவருடைய மனைவி புளோரி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தற்போது ஜெரால்டு குடும்பத்துடன் கருங்கல் அருகே நெடுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். 

ஜெரால்டு கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஜெரால்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த புளோரி கதறி அழுதார். இதுபற்றி புளோரி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெரால்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com