தற்கொலை
தற்கொலை

கருங்கல் அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கருங்கல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

நாகர்கோவில்:

கருங்கல் அருகே மிடாலம் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 45), மீனவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதுதொடர்பாக சகாயராஜிக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. 

இதில் கோபமடைந்த சகாயராஜ் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இதனால் மனவேதனை அடைந்த சகாயராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com