கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலி

தூத்துக்குடியில் இன்று கடலில் மீன்பிடித்தபோது மின்னல் தாக்கி மீனவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழப்பு
உயிரிழப்பு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி வெள்ளப்பட்டி 50 வீடு காலனியை சேர்ந்தவர் அந்தோணி செசிலர். (வயது 28), மீனவர். இன்று காலை அந்தோணி செசிலர், தனது அண்ணனுடன் பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தோணி செசிலர் மீது மின்னல் தாக்கியது. இதில் உடல் கருகிய அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொன்று சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com