சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய தந்தை, மகன் கைது

சேலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சேலம்:

சேலம் பால்மார்க்கெட் பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் லாங்கிலி ரோடு பகுதியை சேர்ந்த மன்தாராம் (வயது 52), அவருடைய மகன் பரத்மாலிக் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 258 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com